1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: ஜப்பானில் கடுமையான நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.1 ஆக பதிவு..!

Q

ஜப்பானில் 2 இடங்களில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் வடக்குப் பகுதியில் உள்ள இவாட் மற்றும் அமோரி மாகாணங்களில் நேற்று நள்ளிரவு 12.59 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவாகி இருந்தது. நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது.

இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.


 

Trending News

Latest News

You May Like