#BIG NEWS : மவுனம் கலைத்த ஷேக் ஹசீனா..! ஆட்சி கவிழ அமெரிக்கா தான் காரணம்..!
வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது. இதன் காரணமாக பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதையடுத்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, ராணுவத்தின் கண்காணிப்பில் இடைக்கால அரசு அமைந்துள்ளது.
இதையடுத்து வங்க தேசத்தில் நோபால் பரிசு பெற்ற பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால ஆட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது.
அந்த ஆட்சிக்கு வங்கதேச இராணுவம் முழு ஆதரவு அளித்து வருகிறது. எனினும் நாடு முழுவதும் போராட்டம் இன்றும் ஓய்ந்த பாடு இல்லை. இந்த நிலையில் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்து முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, தனது பிரதமர் பதவியை பறித்து நாட்டை விட்டு தன்னை வெளியேற்றியதில் அமெரிக்காவின் பங்கு உள்ளதாக பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை கூறியுள்ளார்.
அதாவது வங்கதேசத்தின் தெற்கு பகுதியில் உள்ள தீவை அமெரிக்கா சொந்தம் கொண்டாட முயன்றது. அந்த முயற்சியை தவிடு பொடியாக்கியதால் ஆத்திரமடைந்த அமெரிக்கா எனது ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டது. அதன் விளைவாக மாணவர் அமைப்பினரை தூண்டிவிட்டு வன்முறையை ஏற்படுத்தி தற்போது நாட்டை விட்டு ஓடும் நிலைக்கு தள்ளி உள்ளது. வங்கதேசத்தில் ஏற்பட்டுள்ள வன்முறைக்குப் பின்னால் ஐஎஸ் அமைப்பின் செயல்பாடுகள் இருக்கலாம் என நான் சந்தேகிக்கிறேன் என்றும் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை அவர் முன் வைத்துள்ளார்.
அமெரிக்கா மீது ஷேக் ஹசீனா கூறியுள்ள குற்றச்சாட்டுகள் சர்வதேச அளவில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. மேலும் விரைவில் வங்க தேசத்தில் வந்து ஆட்சியைப் பிடிப்பேன் என உறுதி பூண்டுள்ளார். இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் அமைதியை கையாளும்படியும் பயங்கரவாதத்துக்கு துணை போக வேண்டாம் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
போராட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்ட கட்சிப் பிரமுகர்களின் இறப்புக்கு தனது இரங்கலை தெரிவித்த அவர், அவர்களது குடும்பத்திற்கு அவர்களை கூறியுள்ளார்.