1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : புதிய கட்சியை தொடங்கினார் சரத் பவார்..!

Q

சரத் பவார் மற்றும் அஜித் பவார் என இருவேறு தலைமையின் கீழ் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டது. அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்திற்கு இருதரப்பும் உரிமை கோரின. இந்த சூழலில் தேர்தல் ஆணையம் அதுகுறித்து இறுதி முடிவை அறிவித்துள்ளது.
அஜித் பவர் தரப்பே அசல் தேசியவாத காங்கிரஸ் கட்சி. அதனால் தேர்தலில் அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை அவருக்கே சொந்தம். சட்டப்பேரவையில் பெரும்பான்மை உறுப்பினர்களை அவர் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சின்னம் அஜித் பவார் தரப்புக்கு கிடைக்கும். முன்னதாக, சிவசேனா கட்சி பிளவுபட்ட போது அக்கட்சியின் சின்னத்தை பயன்படுத்தும் உரிமை மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தரப்பு வசமானது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியை அஜித் பவாருக்கு தேர்தல் ஆணையம் வழங்கிவிட்ட நிலையில், இன்று புதிய கட்சியை தொடங்கியிருக்கிறார் சரத்பவார்.
மகாராஷ்டிராவில் சரத் பவாரால் உருவாக்கப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி, தற்போது அவரது அண்ணன் மகன் அஜித் பவாராலேயே இரண்டாக பிளவுபட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திர பவார்) என்ற கட்சியை சரத் பவார் தொடங்கியிருக்கிறார்.

Trending News

Latest News

You May Like