#BIG NEWS : செந்தில்பாலாஜிக்கு செப்.15-ந் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், அவர் எல்.எல்.ஏ., எம்.பி. வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முன்னிலையில் நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இரு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அதனை கேட்ட நீதிபதி அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 15-ந் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் ஜாமீன் கோரி அமைச்சர் செந்தில்பாலாஜி தரப்பில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது