1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : பரபரப்பு..! சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மன் கிழிப்பு..!

1

நடிகை விஜயலட்சுமி புகாரின் பேரில் தன் மீது பதியப்பட்ட பாலியல் வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

சமீபத்தில் இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது ‘‘இந்த வழக்கை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. போலீஸார் 12 வாரத்துக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டு சீமான் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.


இதையடுத்து, முதல்கட்டமாக வளசரவாக்கம் போலீஸார் சீமானுக்கு அண்மையில் சம்மன் அனுப்பியிருந்தனர்.

ஆனால் கிருஷ்ணகிரியில் ஏற்கெனவே திட்டமிருந்த கட்சி கலந்தாய்வு கூட்டத்தில் இன்று பங்கேற்க இருப்பதால் அவர் ஆஜராக போவதில்லை என தகவல் வெளியானது.இதனையடுத்து நாளை நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிட்டு சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் இன்று வளசரவாக்கம் போலீசார் சம்மனை ஒட்டிச் சென்றனர். சீமான் நாளை ஆஜராகவில்லையென்றால், அவர் கைது செய்யப்பட நேரிடும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களிலேயே கிழிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Trending News

Latest News

You May Like