#BIG NEWS :- தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு அதிரடி உத்தரவு..!
மாணவிகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில் புதிய உத்தரவை தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்துள்ளது.
அதன்படி, வாகனங்களில் இனி ஒரு பெண் உதவியாளர் இருக்க வேண்டும்.வாகன ஓட்டுநர், உதவியாளர் மது அருந்தியுள்ளார்களா என தினம் பரிசோதிக்க வேண்டும். ஓட்டுநர்கள், உதவியாளர்கள் விவரங்களை நாளை மாலைக்குள் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கத்தில் பதிவேற்ற உத்தரவிட்டுள்ளது.
அனைத்து பள்ளி வாகனங்களிலும் ஜிபிஎஸ் மற்றும் சிசிடிவி கேமரா கட்டாயம் பொருத்தவேண்டும் .ஒவ்வொரு பள்ளி வாகனத்திலும் வேக கட்டுப்பாட்டு கருவி பொறுத்தப்பட்டிருக்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்தி, காட்சிகளை சேகரித்து காவல்துறையிடம் வழங்க வேண்டும். பள்ளி வாகன ஓட்டுநர்கள், கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் குறைந்தது 10 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும்.
அதாவது, கனரக வாகன ஓட்டுநர் உரிமத்துடன் 10 ஆண்டு அனுபவமுள்ள ஓட்டுநரையே பள்ளி வாகனம் இயக்க வேண்டும். ஓட்டுநர்களுக்கு தினமும் சுவாச பரிசோதனை செய்த பிறகே வாகனத்தை இயக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.