#BIG NEWS : சோகம்..! புதுச்சேரியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு!
புதுச்சேரியை சேர்ந்தவர் நாராயணன், இவரது மனைவி மைதிலி. இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில் இரண்டாவது மகளான ஆர்த்தி (9) அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த சனிக்கிழமை ஆர்த்தி அவரது வீட்டருகே விளையாடி கொண்டிருந்தபோது காணாமல் போனார். இது குறித்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சிறுமியை போலீசார் தேடி வந்தனர். சிறுமி கடந்து சென்ற பாதைகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சிறுமி ஆர்த்தி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது. சிறுமியின் வீடு அருகே சாக்கடையில் சாக்கு மூட்டையில் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.