#BIG NEWS : இனி சனிக்கிழமைகளில் ஆர்டிஓ அலுவளுகம் செயல்படும்..!

பொதுவாக அரசு அலுவலகங்கள் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை செயல்படும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையாகும். இவை போக முக்கிய பண்டிகை நாட்களிலும் விடுமுறை விடப்படும்.
இந்நிலையில் தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர் உரிம விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் சனிக்கிழமைகளில் செயல்பட உத்தரவிட்டுள்ளது.
மேலும், சனிக்கிழமைகளில் செயல்படும் அலுவலகங்களின் பெயரைத் தெளிவாகக் குறிப்பிட்டு, பொதுமக்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விரிவான செய்திக்குறிப்பு வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏதேனும் முறைகேடுகள் மற்றும் புகார்கள் வந்தால், இந்த அறிவுறுத்தல் உடனடியாக திரும்பப் பெறப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.