1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை..!

Q

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் தொடங்கி வைத்தார். அதன்படி கஞ்சநாயக்கன்பட்டியில் சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 17 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலையரங்க கட்டிடத்தையும், சுக்கில நத்தம் கிராமத்தில் ரூ.13 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் ரூ.10 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ள நியாய விலை கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார். அதனைத் தொடர்ந்து மீனாட்சிபுரம் மற்றும் ஆமணக்கு நத்தம் கிராமத்தில் தலா ரூ.8 லட்சம் மதிப்பில் பயணிகள் நிழற்குடை கட்டுவதற்கும், ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக பைப்லைன் அமைக்கும் பணிகளுக்கும் அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

அருப்புக்கோட்டை கஞ்சநாயக்கன்பட்டியில் ஊரக வளர்ச்சிபணிகளை துவக்கி வைத்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் . ராமச்சந்திரன் பேசுகையில்,”முதியோர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்து ஆணை பெற்றுள்ள அனைவருக்கும் விரைவில் முதியோர் உதவித்தொகை வழங்கப்படும்.

வரும் ஜனவரி மாதம் முதல் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும். 

கடவுள் என்னை எத்தனை நாட்கள் ஓடவிடுகிறாரோ அத்தனை நாட்களுக்கு நான் உங்களுக்காக ஓடிக் கொண்டே இருப்பேன். இவ்வாறு கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like