#BIG NEWS : விரைவில் ரெட் அலெர்ட் கொடுக்கப்படும் - பிரதீப் ஜான்..!
டெல்டா மாவட்டங்களில் இன்று இரவு தொடங்கி நாளையும் நாளை மறுநாளும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “டெல்டா மாவட்டங்களில் மழையானது இன்று (திங்கட்கிழமை 25 ஆம் தேதி) இரவு தொடங்கி, நாளை நாளை மறுநாள் (நவ 26, 27) ஆகிய தேதிகளில் தீவிரமாக பெய்யும். எனவே விழிப்புடன் இருக்க வேண்டும்.
மேலும், நாகை, காரைக்கால, திருவாரூர், காரைக்கால், தஞ்சை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மிக கனமழை பெய்யும். 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் டெல்டா மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் கொடுக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது” என்று பதிவிட்டுள்ளார்.
Delta belt is going to see rains starting from Monday 25th night and have to be watchful for 26 and 27th for extreme rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) November 25, 2024
----------------
Nagai, Tiruvarur, Karaikkal, Thanjvur, Mayiladuthurai and Cuddalore all needs to watchful on 26 and 27th for very heavy rains and there is… pic.twitter.com/QYIScJkEBy