1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : கனமழைக்கான ரெட் அலர்ட் விடுப்பு : வீட்டை விட்டு வெளியே வராதீங்க..!

1

மிக்ஜாம் புயல் நாளை மறுநாள் தீவிர புயலாக ஆந்திர மாநிலத்தின் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னையிலிருந்து தென்கிழக்கு திசையில் 290 கி.மீ தொலைவில் இந்த மிக்ஜாம் புயல் நிலை கொண்டுள்ளது. மிக்ஜாம் புயல் தற்போது கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.

மணிக்கு 5 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த புயல் கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. நாளை மதியம் சென்னையை நெருங்கும் இந்த புயல் நாளை மறுநாள் தெற்கு ஆந்திராவில் தீவிர புயலாக கரையை கடக்க உள்ளது. புயல் கரையை கடக்கும் போது 80 - 90 கிமீ முதல் 100 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.

கடலோர பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பல அடி உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பி வருகின்றன. சென்னை, எண்ணூர், காட்டுப்பள்ளி, கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. புயல் கரையை நெருங்க நெருங்க மழை பொழிவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் சென்னையில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like