#BIG NEWS: அரசு பேருந்தின் பின்பக்க சக்கரங்கள் திடீரென தனியே கழன்று ஓடியதால் அதிர்ச்சி..!

குற்றாலம் நோக்கி அரசு விரைவுப் பேருந்து ஒன்று இன்று (ஜூன் 20) சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் ஓட்டுநர், நடத்துநர் மற்றும் 80-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், பேருந்தானது தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள இடைகால் அருகே வந்த போது, அரசுப் பேருந்தின் பின் பக்கத்தில் உள்ள சக்கரத்தின் அச்சு முறிந்தது. இதில், சக்கரங்கள் திடீரென சாலையில் கழன்டு சாலையில் ஓடியன. இதில், பேருந்தானது குறிப்பிட்ட தூரம் சாலையில் உரசியபடி சென்றது.
உடனே, ஆபத்தை உணர்ந்த பேருந்தின் ஓட்டுநர் சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்தினார். இதில், அரசுப் பேருந்தில் பயணித்த பயணிகள் தூக்கி வீசப்பட்டனர். மேலும், பின் இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் பலத்த காயமடைந்தனர். மேலும், பேருந்தின் படியில் பயணம் செய்த மூன்று மாணவர்களுக்கு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.
இவர்களை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து, இலத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்