1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : அன்புமணியின் பதவியை பறித்த ராமதாஸ்..!

Q

விழுப்புரம் தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ், தலைவர் பதவியை நானே இனி எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி செயல் தலைவராக பதவி வகிப்பார். தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்க பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றை பிறகு சொல்கிறன் என தெரிவித்தார்.

 

முன்னதாக ராமதாஸ், அன்புமணி இடையே சில மாதங்களுக்கு முன்பு கருத்து மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

பா.ம.க., கட்சியின் தலைவராக அன்புமணி இருந்து வந்தார். இந்நிலையில்இன்று (ஏப்ரல் 10) மகனது தலைவர் பதவியை பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பறித்து கொண்டார். இது குறித்து விழுப்புரத்தில் நிருபர்கள் சந்திப்பில் ராமதாஸ் கூறியதாவது: பா.ம.க., தலைவர் பதவியையும் நானே எடுத்து கொள்கிறேன்.

தேர்தலின் வெற்றிக்காக, அயராது உழைக்க வேண்டும் என்ற நோக்கில், பா.ம.க.,வின் தலைவராக பொறுப்பு வகித்து வரும் அன்புமணியை பா.ம.க.,வின் செயல் தலைவராக நியமனம் செய்கிறேன். பா.ம.க.,கட்சியினர் ஒற்றுமை உணர்வுடன் தீவிரமாக செயல்பட்டு, தேர்தல் வெற்றிக்கு பணியாற்ற வேண்டும்.

நான் தலைவராக பொறுப்பேற்றதற்கு காரணங்கள் பல உண்டு. எல்லாவற்றையும் உங்களிடம் கூற முடியாது. பதவி பெறும் ஆசை எனக்கில்லை. தேர்தலை முன்னிட்டு இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவு. கூட்டணி குறித்து பொதுக்குழுவில் முடிவெடுப்போம்.இவ்வாறு ராமதாஸ் கூறினார்.

Trending News

Latest News

You May Like