#BIG NEWS : தமிழகம் முழுவதும் வெடித்தது போராட்டம்..!!

ராகுல்காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 2 ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க குஜராத் ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்து விட்டது. சூரத் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானது. அதில் தலையிட முடியாது எனவும் . ராகுல்காந்தி மீது குறைந்தது 10 கிரிமனல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் குஜராத் ஐகோர்ட்டு கருத்து தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ராகுல் காந்தியின் மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததை எதிர்த்து சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வரும் காங்கிரஸ் கட்சியினரை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இதுவரை தேனியில் சாலை மறியலில் ஈடுபட்ட 55 பேரும், விருத்தாச்சலத்தில் 50 பேரும் கைது செய்ப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.