1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : இன்று முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது - தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் அறிவிப்பு..!

1

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழகம் - கேரளா - கர்நாடகா - ஆந்திரா - பாண்டிச்சேரி மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்துகளை இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்பதை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து சங்கங்களும் ஒருமனதாக தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளது.

தமிழக – கேரளா – கர்நாடகா மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட உள்ளன. 07.11.2025 அன்று, தமிழ்நாட்டிலிருந்து கேரளாவுக்கு சென்ற நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளில், கேரளா போக்குவரத்து துறை திடீரென 30-க்கும் மேற்பட்ட பேருந்துகளை பிடித்து, மொத்தம் 70 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இதேபோல், கடந்த ஏழு நாட்களாக கர்நாடகா போக்குவரத்து துறை, தமிழ்நாடு பதிவு எண் கொண்ட 60-க்கும் மேற்பட்ட பேருந்துகளை தடுத்து, ஒவ்வொன்றுக்கும் 2.2 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, மொத்தம் 1.15 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து அந்த மாநிலங்கள் கூறியுள்ளதாவது, 2021ஆம் ஆண்டு மத்திய அரசு உருவாக்கிய ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பர்மிட்’ (AITP) விதிமுறையின்படி, தமிழ்நாட்டில் பிற மாநில பேருந்துகளிடமிருந்து சாலைத்தொகை வசூலிக்கப்படுகின்றது என்பதால், நாங்களும் வசூலிக்கிறோம் என தெரிவித்துள்ளன. இதனால், பேருந்து உரிமையாளர்கள் இரட்டிப்பு வரியும் அபராதங்களும் செலுத்த இயலாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதன் விளைவாக, 07.11.2025 இரவு 8 மணிமுதல், தமிழ்நாட்டிலிருந்து கேரளா நோக்கி இயக்கப்படும் நூற்றுக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான போக்குவரத்து பாதிப்பதுடன், தமிழகத்திலிருந்து சபரிமலைக்கு செல்லும் பயணிகளுக்கும் சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது.

ஒவ்வொரு மாநிலங்களுக்கும் இடையேயான ஆம்னி பேருந்துகளுக்கு, காலாண்டு (90 நாட்கள்) அடிப்படையில் தமிழ்நாடு சாலைத்தொகை ரூ.1.50 லட்சம், AITP சாலைத்தொகை ரூ.90,000 மற்றும் கேரளா அல்லது கர்நாடகா சாலைத்தொகை சுமார் ரூ.2 லட்சம் என, வருடத்துக்கு மொத்தம் ரூ.4.50 லட்சம் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழ்நிலையில், 10.11.2025 மாலை 5 மணிமுதல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பேருந்து சேவைகள் முழுமையாக நிறுத்தப்பட உள்ளன என்று அந்தந்த மாநில பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் ஒருமனதாக அறிவித்துள்ளன.

Trending News

Latest News

You May Like