1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நம்பர் 1 வீரர் கார்ல்சனை வீழ்த்திய பிரக்ஞானந்தா..!

1

அமெரிக்காவில் கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான பிரீ ஸ்டைல் சர்வதேச செஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

இதில் லாஸ் வேகாஸில் இன்று நடைபெற்ற 4வது சுற்றில் நம்பர் 1 வீரரான மார்க்ஸ் கார்ல்சன் ( நார்வே ), பிரக்ஞானந்தா ( இந்தியா ) ஆகியோர் மோதினர்.

இந்த ஆட்டத்தில் வெள்ளை நிற காய்களுடன் பிரக்ஞானந்தா விளையாடினார் . சிறப்பாக செயல்பட்ட பிரக்ஞானந்தா கார்ல்சனை வீழ்த்தி வெற்றி பெற்றார் . இதனால் 4.5 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா முதலிடத்தில் உள்ளார்.சமீபத்தில் இந்தியாவின் நடப்பு உலக சாம்பியனான டி. குகேஷிடம் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த கார்ல்சன், 10' + 10' என்ற நேரக் கட்டுப்பாட்டுடன் நடைபெறும் குரூப் நிலையின் 4வது சுற்றில் பிரக்ஞானந்தாவிடம் தோல்வியடைந்தார்

கிளாசிக்கல், ரேபிட் மற்றும் பிளிட்ஸ் வடிவங்களில் கார்ல்சனை வீழ்த்தி மிகப்பெரிய சாதனையை ஏற்கனவே படைத்துள்ள 19 வயதான பிரக்ஞானந்தா, ஐந்து முறை உலக சாம்பியனான கார்ல்சனை வெறும் 39 நகர்வுகளில் ஆதிக்கம் செலுத்தி தோற்கடித்தார்.

Trending News

Latest News

You May Like