#BIG NEWS : சென்னை மக்களே உஷார்..! நாளை ரொம்ப ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...!
தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் மழை மற்றும் புயல் நிலவரம் குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் எச்சரிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு முதல் புதுச்சேரி பெல்ட்டில் மழை விரைவில் தொடங்கும் என தெரிவித்துள்ளார். மாலை அல்லது இரவு நேரத்தில் மழை தீவிரம் அதிகரிக்கும் என்றும் வேறு எங்கும் இப்போது மழை பெய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த புயலை விளக்குவதற்கு மிகவும் கடினமான இருந்தது என்றும் மேலும் எனது சிறந்த மாதிரி விளக்கத் திறன்கள் மற்றும் அனுபவத்தின் அடிப்படையில், இந்த முன்னறிவிப்பை வெளியிடுவதாகவும், இது எப்படி வெளிப்படுகிறது என்பதை பார்க்கலாம் என்றும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
KTCC இல் நல்ல மழையைப் பார்க்கும் மகிழ்ச்சி இந்த மோசமான கட்டங்களையெல்லாம் மறக்கச் செய்யும் என்றும்
அனைத்து ஆதரவுக்கும் அன்புக்கும் நம்பிக்கைக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்.