#BIG NEWS : மக்கள் அதிர்ச்சி..! மீண்டும் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் தீ விபத்து..!

மகா கும்பமேளா உத்தரப் பிரதேசம் பிரயாக்ராஜ் நகரில் நடந்து வருகிறது. இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும்.அந்த வகையில் ஜனவரி 13ஆம் தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26ஆம் தேதி வரை என 45 நாட்கள் நடைபெற உள்ளது.
இதற்கிடையே மகா கும்பமேளாவின் 18வது செக்டாரில் இப்போது தீ விபத்து ஏற்பட்டது. சங்கராச்சாரியார் மார்க்கில் உள்ள ஹரிஹரானந்த் முகாமில் உள்ள கூடாரங்களில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்து குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏற்கனவே அங்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இப்போது மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.