1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS :மக்களே எச்சரிக்கை..! சென்னையை நோக்கி திரும்பும் புயல்..!

Q

கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டித் தீர்த்து வரும் நிலையில் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக கடலூருக்கு பேரிடர் மீட்பு குழு விரைந்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் 42 நிவாரண முகங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சென்னையிலும் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் கடற்பகுதிகளில் அலைகள் பல அடி உயரத்துக்கு எழும்புகின்றன.

பட்டினப்பாக்கம் பகுதியில் பலத்த காற்றும் வீசி வருகிறது. வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழகத்தை நோக்கி நெருங்கி வருவதால் கடலோர பகுதிகளில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியிலும் கடல் சீற்றம் காணப்படுகிறது. ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடம், மண்டபம் உள்ளிட்ட கடலோர பகுதிகளிலும் கடல் கடும் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்த வண்ணம் உள்ளன. கடல் சீற்றம் காரணமாக பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் கடலோரங்களில் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளது. கடல் சீற்றம் காரணமாகி மக்கள் கடலில் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வடக்கு வட மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மாலை புயலாக மாற உள்ளது. இன்று புயலாக மாறிய பின் நாளை நள்ளிரவு அல்லது நாளை மறுநாள் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் என்றும் இந்திய மாநில மையம் கணித்துள்ளது.

இன்று உருவாகும் ஃபீஞ்சல் புயல் 29ம் தேதி வரை வங்க கடலில் புயலாகவே நீடிக்கும். அதன் பின் நகர்ந்து 30ம் தேதி அன்று சென்னைக்கு 30கிமீ தொலைவில் மையம் கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அப்போது, புயல் கரையை நெருங்கும் முன் மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like