#BIG NEWS : தனி கட்சி தொடங்குகிறாரா ஓ.பன்னீர்செல்வம்..?

அதிமுகவில் தன்னை சேர்க்காவிட்டால் புதிய கட்சியை தொடங்க ஓபிஎஸ் திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக, 'எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்' என தேர்தல் ஆணையத்தில் பெயர் பதிவு செய்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பண்ருட்டி ராமச்சந்திரனின் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்ட ஓ.பன்னீர் செல்வம், அதன்படியே காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஜோதி ராமன் என்ற தனது ஆதரவாளர் மூலமாக தேர்தல் ஆணையத்தில் எம்ஜிஆர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்கிற கட்சியின் பெயரை பதிவு செய்யக்கோரி விண்ணப்பம் அளித்துள்ளார்.
கடந்த டிசம்பரில் அளித்த இந்த விண்ணப்பத்துக்கு 2025 ஜனவரி மாதம் தேர்தல் ஆணையமும் ஒப்புதல் (aknowledge) அளித்துள்ளது.
எடப்பாடியின் அழுத்தத்தால் ஒருவேளை தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் இல்லாமல் போனால் ஓ. பன்னீர்செல்வம் இந்த தனி கட்சியை வைத்துக்கொண்டு 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவார்.