1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : வடபழனி, தாம்பரம் பேருந்து நிறுத்தங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது..!

1

தீபாவளிப் பண்டிகை வருகின்ற ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட உள்ளதால், சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.மக்களின் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள், சிறப்பு ரயில்கள் உள்ளிட்டவை ஏற்பாடு செய்யப்பட்டு, சென்னை நகரில் இருந்து பாதுகாப்பாக மக்கள் வெளியேற பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னை நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு அங்கிருந்து பேருந்துகள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னையிலிருந்து செங்கல்பட்டு வழியாக இயக்கப்படும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் காவல்துறை உத்தரவின் பேரில் கோயம்பேட்டில் புறப்பட்டு நசரத்பேட்டை புறவழிச்சாலை வழியாக கிளாம்பாக்கம் வந்தடையும் என்று அனைத்து ஆம்னி பேருந்துகள் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், வடபழனி, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பேருந்து நிறுத்தங்களில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது எனவும், பயணிகள் அனைவரும் கோயம்பேடு அல்லது கிளாம்பாக்கம் தற்காலிக பேருந்து நிலையத்தில் ஏறிச்செல்லலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியார் ஆம்னி பேருந்துகள் சம்மந்தமான புகார்களை 9043379664 என்ற சங்கத்தின் தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். 

Trending News

Latest News

You May Like