#BIG NEWS : பள்ளிகளில் இனி ஆல் பாஸ் கிடையாது..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/ca91cfefeb93430e91992b0862ba6423.jpg?width=836&height=470&resizemode=4)
1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற நடைமுறை பின்பற்றப்படுகிறது. தற்போது, 8ம் வகுப்பு வரை மட்டுமே அனைவரும் தேர்ச்சி என்ற நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏனென்றால் 9ம் வகுப்பு மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்குவதால் 10ம் வகுப்பில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. இதனை கருத்தில் கொண்டு 9ம் வகுப்பில் மாணவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு சில முக்கிய கட்டுப்பாடுகளை அமலில் வைத்துள்ளது பள்ளி கல்வித்துறை.
இந்நிலையில், 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி கொள்கையில் மாற்றம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
தற்போதுள்ள 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்ற முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
கல்வி உரிமைச் சட்டம் அமலுக்கு வந்த சமயத்தில் இருந்தே, ஒன்றாம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை அடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெறுவார்கள் என்பது விதிமுறையாக இருந்து வந்தது. இதனால் கல்வித் தரம் குறைவதாக அவ்வபோது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்நிலையில்தான். ஆர்.டி.இ என்ற கல்வி உரிமை சட்டத்தின் விதிகள் திருத்தப்பட்டுள்ளன. அந்த விதிகளின் படி, ஐந்தாம் வகுப்பிலும் எட்டாம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். அந்த வகுப்புகளில் மாணவர்கள் தேர்ச்சி பெறாவிட்டால், அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அதாவது இரண்டு மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தப்பட்டுள்ளது. அப்போதும் அவர் தேர்ச்சி பெறாவிட்டால் மீண்டும் ஒருமுறை அதேவகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் திருத்தம் கொண்டுவந்துள்ளது.