#BIG NEWS: இன்று புதிய வருமான வரி மசோதா தாக்கல்!
புதிய வருமான வரி மசோதா 2025 கடந்த பிப்ரவரி மாதம் 13-ம் தேதி மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாவில் பல்வேறு மாற்றங்களை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதன்படி, தேர்வுக் குழு வழங்கிய பெரும்பாலான பரிந்துரைகளை உள்ளடக்கிய புதுப்பிக்கப்பட்ட வருமான வரி மசோதாவின் புதிய பதிப்பு ஆகஸ்ட் 11-ம் தேதி நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று (ஆக.11) தாக்கல் செய்யப்படுகிறது. இதில், டிஜிட்டல் வரி விதிகள், தகராறு தீர்வுகள் போன்ற பல மாற்றங்கள் இடம் பெறுகிறது. டிவிடெண்ட் வருவாய் வரி விலக்கு, மாநகராட்சி வரிக்கு பின் 30% ஸ்டாண்டர்ட் விலக்கு, வாடகைக்கு விடப்படும் சொத்து கட்டுமானத்திற்கு வட்டிக்கு விலக்கு உள்ளிட்ட சலுகைகள் இடம் பெறலாம். இந்த மசோதாவை 31 உறுப்பினர்கள் கொண்ட குழுவினர் சமர்பித்துள்ளனர்.