1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாளை நடைபெறவிருந்த நீட் முதுநிலை தேர்வு ஒத்திவைப்பு..!

1

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் எனும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. நீட் தேர்வில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் நாடு முழுவதும் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. நீட் தேர்வினால் ஏழை எளிய கிராமப்புற மாணவ மாணவிகளின் மருத்துவ கனவு சிதைந்த போகிறது என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு தொடர்ந்து மத்திய அரசை உலுக்கி வருகிறது.

ஆனாலும் தமிழக அரசின் இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்ப்பது இல்லை. இதுவரை இல்லாத அளவுக்கு இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டு உள்ளன. தவறுகள் நடந்ததை மத்திய அரசே ஒப்புக் கொண்டுள்ளது. உச்ச நீதிமன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. இந்த வழக்குகளுக்கு பதிலளிக்குமாறு உச்சநீதிமன்றமும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படுவது போலவே முது நிலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அதாவது, இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு தனித்தனியாக நீட் என்னும் தகுதித்தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது. இளநிலை நீட் தேர்வு பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்காக நடத்தப்படும்.

நீட்டில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் இளநிலை மருத்துவ மாணவர்கள் சேர்க்கை நடைபெறும். அதேபோல நீட் பிஜி தேர்வு மூலமாக எம்.டி., எம்.எஸ் மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர முடியும். அந்த வகையில் நீட் பிஜி தேர்வு நாளை 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில், நாளை நடைபெறவிருந்த முதுநிலை நீட் தேர்வுகளை ஒத்திவைப்பதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இளநிலை நீட் தேர்வுகளில் முறைகேடுகள் நடைபெற்றது உறுதியானதையடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சற்று நேரத்திற்கு முன் NTA தலைவர் மாற்றப்பட்ட நிலையில் புதிய தலைவர் தேர்வினை ஒத்தி வைத்திருக்கிறார். 

1

Trending News

Latest News

You May Like