1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: பாமக இளைஞரணி பொறுப்பிலிருந்து முகுந்தன் விலகல்!

Q

பாமக இளைஞரணி தலைவராக இருந்த அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவராக கடந்த 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியேற்றார். இதையடுத்து ஜி.கே.மணியின் மகனும், திரைப்படத் துறையில் லைகா நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் உள்ள தமிழ் குமரனுக்கு இளைஞர் சங்கத் தலைவர் பதவியை அக்டோபர் மாதம் ராமதாஸ் வழங்கினார். அடுத்த 3 மாதத்தில், அதாவது ஜனவரி 2023-ம் ஆண்டு தனது பதவியை தமிழ் குமரன் ராஜினாமா செய்தார். இந்நிலையில், ராமதாஸின் மகள் ஸ்ரீகாந்தியின் மகனான முகுந்தனை மாநில ஊடகப் பிரிவு செயலாளராக நியமித்த ராமதாஸ், அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார். அவர் பங்கேற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் முகுந்தனை காணலாம்.
இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக முகுந்தன் பரசுராமனை அறிவித்தார் ராமதாஸ்.
பாமக பொதுக்குழுவில் ராமதாஸின் பேரன் முகுந்தனுக்கு கட்சிப் பதவி வழங்கியதற்கு அன்புமணி எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அந்த பதவியிலிருந்து முகுந்தன் விலகவிருப்பதாக தகவல் வெளியாகியது. பொதுக்குழு மேடையிலேயே இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, தைலாபுரத்தில் புதியதாக கட்சி அலுவலகம் தொடங்கியிருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், அன்புமணியின் எதிர்ப்பை மீறி கட்சிப்பதவியை ஏற்க விருப்பமில்லை என ராமதாஸிடம் முகுந்தன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியது.
தைலாபுரத்தில் இன்று (மே 29) பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்து அன்புமணி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்தார்.
இந்நிலையில் முகுந்தன், பாமக இளைஞரணி சங்க தலைவர் பொறுப்பிலிருந்து விலகுவதாக தற்போது அறிவித்துள்ளார். முகந்தனுக்கு கட்சி பொறுப்பு வழங்கப்பட்ட போதுதான், ராமதாஸ் - அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Trending News

Latest News

You May Like