#BIG NEWS : சனாதனம் குறித்து பேசிய அமைச்சர் உதயநிதி தலைக்கு ரூ. 10 கோடி : பகீர் கிளப்பிய அயோத்தி சாமியார்!
சென்னை காமராஜர் அரங்கில் தமிழ்நாடு முற்போக்கு கலைஞர்கள் எழுத்தாளர்கள் சங்கம் நடத்திய ‘சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. `சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் `சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது என்று அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
உதயநிதியின் இந்த கருத்துக்கு பல்வேறு எதிர்வினைகள் தற்போது கிளம்பியுள்ளன.
இந்நிலையில் சனாதனத்துக்கு எதிரான கருத்து தெரிவித்த தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதியின் தலைக்கு 10 கோடி ரூபாயை அயோத்தி சாமியார் பரமஹம்ச ஆச்சார்யா அறிவித்துள்ளார். இன்று அவரது மடத்தில், உதயநிதிக்கு எதிராக கருத்துகளை தெரிவித்ததுடன், அமைச்சர் உதயநிதியின் உருவப்படத்தை வாளால் குத்திக்கிழித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
சனாதனத்துக்கு எதிராக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்களுக்கு பாஜக கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறது. மேலும், டெல்லி, பீகார் மாநிலங்களில் உதயநிதி மீது புகாரும் அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' - அயோத்தி சாமியார்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 4, 2023
#UdhayanithiStalin | #DMK | #SanatanaDharma | #UttarPradesh pic.twitter.com/VH5Ijw9QVl
'உதயநிதி தலைக்கு ரூ.10 கோடி' - அயோத்தி சாமியார்
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) September 4, 2023
#UdhayanithiStalin | #DMK | #SanatanaDharma | #UttarPradesh pic.twitter.com/VH5Ijw9QVl