#BIG NEWS : அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் மனு ஒத்திவைப்பு..!

கடந்த ஜூன் 13ஆம் தேதி செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்திற்குள்ளும் நுழைந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி திமுக அரசுக்கு நெருக்கடியை உருவாக்கினர்.
சோதனையின் முடிவில் ஜூன் 14ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கிட்டதட்ட ஐந்து மாதங்கள் நெருங்கும் நிலையிலும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஆகியவற்றின் கதவுகளைத் தட்டிப் பார்த்தும் பலன் இல்லை. எனவே உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார்.
உச்ச நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று செந்தில் பாலாஜி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. தற்போது அந்த ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இந்த நிலையில் இன்றைய விசாரணைக்கு பின் நவம்பர் 6ஆம் தேதிக்கு இந்த மனுவின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் நவம்பர் 6 வரை செந்தில் பாலாஜி சிறையில் இருக்க வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.