#BIG NEWS : அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி..!
தமிழ்நாடு மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை அமைந்தகரை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளார்.
மேலும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வரும் அவர் நாளை காலை வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வயிற்று வலி காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சரை அன்பில் மகேஷ் பொய்யாமொழியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்க சென்றுள்ளார். இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.