1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : தனித்துப் போட்டியிட இருப்பதாக மம்தா பானர்ஜி அறிவிப்பு..!

Q

2024 நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில் காங்கிரஸ் தலைமையில் 35க்கும் மேற்பட்ட கட்சிகளை ஒருங்கிணைத்து இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது இதில் பிரதான எதிர்க்கட்சிகளான ஆம் ஆத்மி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, சமாஜ்வாதி கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஏற்கனவே இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டங்கள் ஐந்து முறை நடத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் தனித்துப் போட்டியிட இருப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மமதா பானர்ஜி அறிவித்துள்ளார். தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு எட்டப்படாததால் இந்த முடிவை அவர் எடுத்திருக்கிறார். நாங்கள் I.N.D.I.A கூட்டணியில் தொடர்கிறோம்.. ஆனால் மேற்கு வங்கத்தில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவோம் என்று மமதா தெரிவித்திருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது

Trending News

Latest News

You May Like