1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : மதுரை தவெக பொறுப்பாளர் ஆனந்தின் கண்கள் தானம்..!

Q

தவெக தலைவர் விஜய்க்கு அடுத்தடுத்து அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. அந்த வகையில் கடந்த மாதம் தவெக மாநாட்டு பணியை கவனித்து வந்த புதுச்சேரி மாநில நிர்வாகிக்கு திடீரென எற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்தார். 
இதே போல தவெகமாநாட்டிற்கு காரில் வந்த திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக்கறிஞர் கில்லி VL.சீனிவாசன் விபத்தில் உயிரிழந்தார். இதனால் விஜய் கட்சியின் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், தற்போது மீண்டும் ஒரு சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. 
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் மதுரை தெற்கு மாவட்டம் இளைஞரணி தலைவர் ஆனந்த் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். மதுரை பொன்மேனி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்துள்ளார்.
அப்போது தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் தனியாக கழன்று உள்ளது. இதனால் தலையில் அடிபட்டு காயம் அடைந்தார். உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு உடனடியாக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் ஆனந்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். 
சாலை விபத்தில் உயிரிழந்த மதுரை மாவட்ட தவெக பொறுப்பாளர் ஆனந்தின் கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அரசு ராஜாஜி மருத்துவமனையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Trending News

Latest News

You May Like