#BIG NEWS : பரியேறும் பெருமாள் படத்தில் இடம்பெற்ற 'கருப்பி' நாய் பலி உயிரிழப்பு..!
பா.ரஞ்சித் தயாரிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படத்தில், கருப்பி என்ற பெயரில் நாய் ஒன்று நடித்திருந்தது. ஒரு சில காட்சிகளில் மட்டுமே இந்த நாய் வந்தாலும், அனைவருடைய மனதையும் கவர்ந்து விட்டது. குறிப்பாக 'கருப்பியை' நோக்கி ரயில் வரும்போது, படம் பார்ப்பவர்கள் அனைவரும் கருப்பியை நினைத்து உணர்ச்சிவசப்பட்டனர்.
இந்நிலையில் இந்த படத்தில், ' கருப்பி' யாக நடித்த நாய் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தீபாவளி பட்டாசு வெடித்துக் கொண்டிருந்த போது, பயந்து ஓடிய நாய் வாகனத்தில் அடிபட்டு உயிரிழந்தது.
திருநெல்வேலியில் கருப்பி நாயின் உடலை 'பரியேறும் பெருமாள்' படத்தில் நடித்த அதன் உரிமையாளர் உள்பட கிராம மக்கள் நல்லடக்கம் செய்தனர். இந்த சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள், கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.