#BIG NEWS : ரவுடி பிஷ்னோய் தலைக்கு விலை வைத்த கர்னி சேனா!
மஹாராஷ்டிரா முன்னாள் அமைச்சர் பாபா சித்திக் அக்டோபர் 12ம் தேதி சட்டுக் கொல்லப்பட்டார். அவரது கொலைக்கு பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் காரணம் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இந்த கொலை சம்பவத்தில் பிஷ்னோய் கும்பலை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
ஹரியானா, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என வட மாநிலங்களில் பல பகுதியில் கூலிப்படைகளை வைத்து லாரன்ஸ் பிஷ்னோய் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறான். பிஷ்னோய் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவன் குஜராத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான.
இந்நிலையில் அவனது தலைக்கு ஷத்ரிய கர்னிசேனா அமைப்பு ரூ.1.11 கோடி விலை வைத்துள்ளது.
வீடியோ ஒன்றின் மூலம் இந்த அறிவிப்பை அதன் தேசிய தலைவர் ராஜ் ஷெகாவத் அறிவித்து உள்ளார். அவர் அந்த அறிவிப்பில் கூறி உள்ளதாவது;
பிஷ்னோயை அழிக்கும் எந்தவொரு காவல்துறை அதிகாரிக்கும் ரூ.1.11 கோடி வெகுமதி தரப்படும். நிலைமையை அரசு நிர்வாகம் முறையாக கையாளவில்லை என்று அந்த வீடியோவில் கூறி உள்ளார்.
பிஷ்னோய் தலைக்கு கர்னிசேனா அமைப்பு விலை வைத்துள்ளதற்கு பின்னணி காரணம் உண்டு. ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றது, குறிப்பிடத்தக்கது.