#BIG NEWS : பதவி விலகுகிறார் கே.பாலகிருஷ்ணன்..!
விழுப்புரத்தில் சிபிஎம் கட்சியின் 24-வது மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இம்மாநாட்டில் பாஜக, ஆர்.எஸ்.எஸ்.-க்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த மாநாட்டில் பேசிய சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாட்டில் அவசரநிலை பிரகடனம் அமலில் இருக்கிறதா? இந்த ஆட்சியில் போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு கைது செய்யப்படுகிற அவலநிலை இருக்கிறது என கடுமையாக விமர்சித்தார். இதற்கு திமுகவின் நாளேடான முரசொலி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
திமுகவின் கூட்டணி கட்சிகளான விசிக, தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஆகியவை ஆளும் திமுக அரசு விமர்சித்து வரும் நிலையில் மற்றொரு கூட்டணிக் கட்சியான சிபிஎம்-ன் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனும் இத்தகைய விமர்சனத்தை முன்வைத்திருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
இந்த நிலையில் விழுப்புரம் மாநாட்டில் இன்று பேசிய கே.பாலகிருஷ்ணன், தமக்கு அடுத்த மாதம் 72 வயதாகிறது. கட்சி அமைப்பு விதிகளின்படி 72 வயதாகிவிட்டால் எந்த பொறுப்புகளும் வகிக்க முடியாது. ஆகையால் தம்மை கட்சி விதிகளின் கீழ் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.