1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : இனி ஜூன் 3ம் தேதி செம்மொழி நாள்..!

1

இளமை முதல் முதுமை வரை உறுதியாகப் போராடி தமிழ் மொழிக்கு; தம் படைப்புகளாலும் தமது ஆட்சிக் காலத் திட்டங்களாலும் சிறப்புச் சேர்த்த ‘தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3ம் நாளை, இனி, ஆண்டுதோறும் தமிழ்ச் செம்மொழி நாள் என்று கடைப்பிடிப்போம்.

முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் பிறந்த நாளான  ஜூன் 3 ஆம் தேதி அடுத்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

மேலும், ஜனவரி 25 ஆம் தேதி இனிய தமிழ் மொழி தியாகிகள் நாளாக கடைப்பிடிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.ஜனவரி 25ம் நாளினை தமிழ்மொழித் தியாகிகள் நாள் என பின்பற்றி, புகழ் வணக்கம் செய்திட ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் விருது தோற்றுவிக்கப்படும் ரூபாய் 17 லட்சம் ஆண்டுதோறும் வழங்கப்படும்.

வீறுகவியரசர் முடியரசன் அவர்களின் புகழைப் போற்றும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் திருவுருச் சிலை நிறுவிட ரூபாய் 50 லட்சம் வழங்கப்படும்

சிறந்த நூலை எழுதிய நூலாசிரியர் நூலை பதிப்பிக்கும் பதிப்பாளருக்கு பரிசு தொகை உயர்த்தி வழங்கப்படும். கூடுதல் செலவினத்திற்கு ரூபாய் 11 லட்சத்து 55 ஆயிரம் வழங்கப்படும்

டெல்லி தமிழ் சங்கத்தின் கலையரங்கத்தில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக ரூபாய் 50 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்

பள்ளி கல்லூரி மாணவர்களிடையே கட்டுரை, பேச்சுப்போட்டி, மாவட்ட மாநில அளவில் நடத்தி பரிசுத்தொகை வழங்கப்படும். இதற்காக ஒரு கோடியே 88 லட்சத்து 57 ஆயிரம் வழங்கப்படும்.

 

Trending News

Latest News

You May Like