#BIG NEWS : ஜப்பான் மக்கள் பீதி..! "மெகா பூகம்ப எச்சரிக்கையை" வெளியிட்ட வானிலை ஆய்வு மையம்..!
தீவு நாடான ஜப்பான் நிலநடுக்கம் அதிகம் ஏற்படக்கூடிய இடத்தில் பூகோள ரீதியாக அமைந்துள்ளது. இதனால் அங்கு ஆண்டுக்கு சுமா 1,500 நாட்கள் நடுக்கங்கள் ஏற்படுகின்றன. ஜப்பானில் உள்ள வீடுகளும் இதற்கு ஏற்றவாறு தான் கட்டப்பட்டுள்ளது.
சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் அங்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது. இருந்தாலும் சக்தி வாய்ந்த நில நடுக்கங்கள் ஏற்படும்போது அங்கு கடுமையான பாதிப்பு நிகழ்ந்துவிடும். இந்த ஆண்டு துவக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 260 பேர் உயிரிழந்தனர். கடந்த ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்களில் மட்டும் சுமார் 1,300 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருந்தது.
இந்த நிலயில் தான் நேற்று ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் தெற்கு பகுதியில் உள்ள கியாஷூ பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவானது. இரண்டாவது முறை ஏற்பட்ட நிலநடுக்கமானது 7.1 ஆக பதிவானது. இதனால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.
இந்நிலயில், முதல் முறையாக 'மெகா பூகம்ப எச்சரிக்கையை வெளியிட்ட ஜப்பான் வானிலை ஆய்வு மையம்.
ஜப்பானிய கடற்கரையில் 8.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்படக்கூடிய ஆபத்திற்குத் தயாராகுமாறு அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை
ஜப்பானின் தெற்கு பகுதி தீவான Kyushu-வில் நேற்று(ஆகஸ்ட் 8) ஏற்பட்ட 73 ரிக்டர் என்ற அளவிலான நிலநடுக்கத்தை அடுத்து இந் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஜப்பானிய வானிலை ஆய்வு முகமை அதிகாரி ஷின்யா சுகாடா கூறுகையில்
இந்த மிகப்பெரிய நிலநடுக்கம் உடனடியாக ஏற்படும் என்பதற்கான எச்சரிக்கை இல்லை என்றாலும், எதிர்காலத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் வழக்கத்தை விட அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது