1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : சிறை செல்லும் முதலமைச்சர்களின் பதவி நீக்கம்.. புதிய சட்டம்..!

Q

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முடிவடைய உள்ள நிலையில் பல முக்கியமான மசோதாக்களை மத்திய அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஒன்றுதான் பிரதமர்- முதல்வர்களை பதவி நீக்கம் செய்யும் சட்ட மசோதா.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று மக்களவையில் தாக்கல் செய்யும் இந்த மசோதாவானது, பிரதமர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்யப்பட்டு 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் அவர்கள் பதவியை இழக்க அல்லது பதவியைப் பறிக்க வகை செய்யும்.

பிரதமர் 30 நாட்கள் தொடர்ந்து சிறையில் இருந்தால் 31-வது நாள் அவரது பதவி பறிபோய்விடும் அல்லது அவரை ஜனாதிபதி பதவி நீக்கம் செய்வார்; முதல்வர் மற்றும் மாநில அமைச்சர் ஒருவர் 30 நாட்கள் சிறையில் இருந்தால் 31-வது நாள் அவர்களது பதவி பறிபோகும் அல்லது அவர்களை ஆளுநர்கள் பதவி நீக்கம் செய்வர்.இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மக்களவையில் அறிமுகம் செய்கிறார். 

அதனை தொடர்ந்து இந்த மசோதா கூட்டு குழுவின் பரிசீலனைக்காகவும் அனுப்பப்பட உள்ளது. தற்போது பிரதமரோ அல்லது மாநில முதல்வர்களோ மத்திய அமைச்சர்களோ அல்லது மாநில அமைச்சர்களோ தீவிர குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தால் அவர்களை பதவி நீக்கம் செய்வதற்கு எந்த விதமான சட்ட வழிமுறைகளும் இல்லை.

Trending News

Latest News

You May Like