#BIG NEWS : பிரபல தயாரிப்பாளர் வீடுகளில் ஐடி ரெய்டு..!

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தலைவருமான தில் ராஜுவின் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (ஜனவரி 21) சோதனை நடத்தி வருகின்றனர்.
புஷ்பா 2 தயாரிப்பாளர், மைத்ரி மூவிஸ் நவீன் எர்னேனி, மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி செர்ரி ஆகியோரது வீடுகளிலும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
ஹைதராபாத்தில் உள்ள அவர்களது வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருமான வரித்துறை அதிகாரிகள் பல குழுக்களாக பிரிந்து ஒரே நேரத்தில் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்தில் பெரிய பொருட் செலவில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படத்தையும், சில ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த வாரிசு படத்தையும் தயாரித்தவர் தில் ராஜூ.