#BIG NEWS : மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு..!

தமிழ்நாடு அரசு துறை நிறுவனமான தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகம் சென்னை அண்ணா சாலையில் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு மின் தொடர் அமைப்பு, மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மானம், பசுமை எரிசக்தி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அங்கு வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். பசுமை எரிசக்தி பிரிவு செயல் பட்டு வரும் நிலையில் அங்கு ஐந்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்மொழிக் கொள்கை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு மத்திய அரசு இடையே மோதல் போக்கு தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இந்தி எழுத்துக்கள் அழிப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் திடீரென தமிழகத்தின் மிக முக்கியமான துறை ஒன்றில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.