1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : இந்த அடிப்படையில் தான் மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 வழங்கப்படும்..!

1

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  அவர்கள் கடந்த சட்ட சபையில் மகளிர் உரிமைத் தொகை ரூ.1000 அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந்தேதி முதல் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.வருமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் , நடைப்பாதையில் வணிகம் செய்யும் பெண்கள்,மீனவ பெண்கள்,கட்டுமான தொழிலில் பணிபுரியும் பெண்கள் ,சிறிய கடைகள் மற்றும் சிறுதொழில் நிறுவனங்களில்  பணிபுரியும் பெண்கள் வீட்டு வேலை செய்யும் பெண்கள்,ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகளில் வேலை பார்க்கும் பெண்கள்,கணவரால் கைவிடப்பட்ட பெண்கள்,முதியோர்கள்,என பலப் பெண்கள் பயன் அடைவார்கள்.

அரசு வேலைகளில் உள்ள எவருக்கும் இந்த பணம் கிடைகாது என்பது குறிப்பிடத்தக்கது.ஒவ்வோரு குடும்பத்தலைவிக்கும் அவர்களின் வங்கி கணக்கில் ரூ.1000 செலுத்தப்படும்.அதற்காக அரசு 1 கோடி பெண்களுக்கு இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

இந்த கூட்டத்த்தில் யாருக்கு ரூ.1000 உரிமைத்தொகை வழங்கவேண்டும்,எதன் அடிப்படையில்குடும்பத்தலைவிகளை தேர்ந்தெடுக்க  வேண்டும்,அதில் அவர்களது ஆண்டு வருமானத்தை ஒப்பிட்டு பார்த்து வழங்க வேண்டும் ,அவர்களின் வயது வரம்பு நிர்ணயிக்க வேண்டும்,என பல நிபந்தனைகள் முடிவு செய்யப்பட்டுள்ளது.

உயர் அதிகாரிகள் தெரிவிக்கையில்,”மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு குடும்பத் தலைவிகளின் வருமானத்தையும்,ரேஷன் அட்டையையும் அடிப்படையாக வைத்துதான் பணம் வழங்கப்படும்”, என உரிமைத் தொகையை சுமாா் ஒரு கோடி மகளிருக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. ரூ.1,000 உரிமைத் தொகையை யாருக்கெல்லாம் வழங்குவது, எப்படி கணக்கெடுப்பு நடத்துவது என்பன குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான சிறப்புப் பணி அதிகாரியாக இளம் பகவத் ஏற்கெனவே நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

உரிமைத் தொகையைப் பெற யாரெல்லாம் தகுதியான மகளிா் என்பதை அடையாளம் காணவும், அவா்கள் குறித்த விவரங்களைச் சேகரிக்கவும் தமிழக அரசு பணிகளைத் தொடங்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்களை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களை மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கு அருகிலேயே அமைத்திடவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கும் திட்டம், இந்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பாக வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திட்டம் குறித்து சட்டப்பேரவையில் விளக்கம் அளித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் அவரவா் வங்கிக் கணக்கில் தொகை நேரடியாகச் செலுத்தப்படும் எனவும் கூறியுள்ளார்.மாநிலம் முழுவதும் வருவாய்த் துறை அலுவலா்களைக் கொண்டு சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த முகாம்களுக்கான ஏற்பாடுகளை மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் செய்து தர வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த முகாம்களின் மூலம், பெண்களிடம் இருந்து உரிய தகவல்கள் கேட்டுப் பெறப்பட உள்ளன. குறிப்பாக, எந்த வகை குடும்ப அட்டை வைத்துள்ளனா், ஆதாா் எண், குடும்ப உறுப்பினா்களின் தொழில் உள்ளிட்ட அடிப்படை விவரங்கள், வங்கிக் கணக்கு எண் போன்றவை கோரப்பட உள்ளன.

மகளிா் உரிமைத் தொகைக்கான விவரங்களைப் பெற ஒட்டுமொத்தமாக ஓரிடத்தை நிா்ணயித்தால் விவரங்கள் பெறுவதில் சிக்கல் ஏற்படும். இதனால், நியாயவிலைக் கடைகளில் மக்கள் பொருள்கள் வாங்க வருவது போது வந்து விவரங்களைத் தந்தால் எளிதாக இருக்கும் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், ஒவ்வொரு நியாயவிலைக் கடைக்கும் அருகிலேயே சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட உள்ளன.

மக்கள் தாங்கள் பொருள்கள் வாங்கும் நியாய விலைக்கடைக்கு அருகில் அமைக்கப்படும் முகாமுக்கு சென்று விவரங்களை அளிக்கலாம். நீண்ட வரிசை ஏற்படும் நிலையில், அவா்களுக்கான குடிநீா் போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து தர உள்ளாட்சி அமைப்புகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை அடிப்படையாகக்கொண்டு, சிறப்பு முகாம்களில் விவரங்கள் பெறப்படும் என அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த முகாம்களை அடுத்த வாரத்தில் இருந்து தொடங்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Trending News

Latest News

You May Like