1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : வெற்றியை நெருங்கும் 'சந்திரயான் 3' - லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இஸ்ரோ!

1

சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து சென்ற விக்ரம் லேண்டர் 25 கிமீ x 134 கிமீ என்ற நீள்வட்டப் பாதையில் நிலாவை தற்போது சுற்றிக் கொண்டிருக்கிறது என ஞாயிற்றுக்கிழமையன்று இஸ்ரோ அறிவித்தது.விக்ரம் லேண்டர் நிலாவில் பாதுகாப்பாகத் இறங்குவதற்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது.

இது தொடர்பான புதிய புகைப்படங்களையும் அவ்வப்போது விக்ரம் லேண்டர் பூமிக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறது. தற்போது நிலாவில் பாறைகள், கற்கள் போன்றவற்றை தவிர்த்து, பாதுகாப்பான தரையிறங்கும் இடத்தைத் தேர்வு செய்யும் சிக்னல்களை பூமியில் இருந்து விஞ்ஞானிகள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பணியின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இஸ்ரோ வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி நாளை மாலை நிலவில் தரையிறங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. நிலவில் லேண்டரை தரையிறக்கும் நடவடிக்கைகள் சரியான பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் சந்திரயான் -3ன் செயல்பாடு திருப்திகரமாக உள்ளது எனவும் திட்டமிட்டப்படி நாளை மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்பகுதியில் லேண்டர் தரையிறக்கப்படும் என இஸ்ரோ டுவீட் செய்துள்ளது.


 


 

Trending News

Latest News

You May Like