#BIG NEWS : போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல்!

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையே கடந்த பல ஆண்டுகளாக பிரச்சனை இருந்து வரும், நிலையில் கடந்த 2023 ஆண்டு முதல் அங்கு தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2023 அக்டோபர் ஏழாம் தேதி முதல் இஸ்ரேலின் நடவடிக்கை பதில் கொடுக்கும் வகையில் ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
மேலும் இஸ்ரேலுக்குள்ளேயே நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் அந்நாட்டு மக்களையும் வெளிநாட்டு மக்களையும் கொன்று வருவதாகவும், பலரை பணைய கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா பகுதியில் போர் விமானங்கள் மூலமாகவும் ஏவுகணைகள் மூலமாகவும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. போர் தொடங்கி 15 மாதங்கள் கடந்த நிலையில் அப்பாவி பாலஸ்தீன குடிமக்கள் கொல்லப்படுவதாக ஹமாஸ் குற்றம் சாட்டி வருகிறது. மேலும் லட்சக்கணக்கானோர் அகதிகளாக பிற பகுதிகளுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போர் காரணமாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அகதிகள் மீது இஸ்ரேல் ராக்கெட் லாஞ்சர் மூலம் தாக்குதல் நடத்தி வருவதாக புகார் எழுந்திருக்கிறது. மேலும் ஐநா ஊழியர்கள் உள்ளிட்ட 50 பேர் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், ஹமாஸ் அமைப்பினர் அங்கு இருந்ததால் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் விளக்கம் அளித்தது.
ஹமாஸுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகள் மீதும் இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. அந்த வகையில் லெபனானின் ஹிஸ்புல்லாக்கள், ஏமனின் ஹைத்திகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் இதுவரை நடத்திய தாக்குதலில் 1,700 குழந்தைகள் உட்பட 42000 பாலஸ்தீனியர்கள் பலியாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இந்த நிலையில் காசா பகுதியில் மனித குலத்திற்கே எதிரான போர் குற்றங்கள் நடைபெற்று வருவதாகவும் இதற்கு காரணமான இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகும், முன்னாள் பாதுகாப்பு துறை அமைச்சர் யோவ் காலண்ட் மற்றும் ஹமாஸ் தலைவர் முகமது தயிப் ஆகியோருக்கு எதிராக பிடிவாரண்டு பிறப்பிக்க வேண்டும் என சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சர்வதேச நீதிமன்றம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உள்ளிட்டோருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த போரை முடிவுக்கு கொண்டு வர இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக் கொண்டுள்ளது. அமெரிக்காவின் அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்க உள்ள நிலையில் இஸ்ரேலின் பணய கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்றால் ஹமாஸ் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்து இருந்தார்.
இந்த நிலையில் பணய கைதிகளை விடுவிப்பது தொடர்பாகவும், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக இஸ்ரேல் அளித்த வரைவு ஒப்பந்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் அளித்துள்ளனர். இதன் காரணமாக 15 மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வந்துள்ளது. போர் நிறுத்தத்திற்காக எகிப்து, கத்தார் உள்ளிட்ட நாடுகள் முயற்சி செய்து வந்த நிலையில் தற்போது போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் தெரியாத நிலையில் பேசிய பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ஹமாஸ் போர்நிறுத்த ஒப்பந்தம் மற்றும் பணயக்கைதிகளை திரும்பப்பெறும் விதிமுறைகளுக்கு கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையின்படி, முறையாக எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பதற்கு முன்பு வாய்மொழியாக ஒப்புதல் அளித்ததாக கூறினார். போர் நிறுத்தம் மற்றும் பணய கைதிகளை திரும்ப ஒப்படைப்பது தொடர்பாக இஸ்ரேல் கொடுத்த நிபந்தனைகள் தொடர்பாக கத்தாரில் பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், எழுத்துப்பூர்வமாக ஒப்புதல் அளிப்பதற்கு முன்னதாக போர் நிறுத்தம் தொடர்பாக வாய்மொழி ஒப்புதல் அளிக்கப்பட்டதாக பாலஸ்தீனிய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக சர்வதேச ஊடகங்கள் கூறியுள்ளன.