1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால்... தமிழக ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!

1

சென்னை உயர்நீதிமன்றம் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி, பொன்முடி தனது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவிகளை இழந்தார். இதைத் தொடர்ந்து, அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருக்கோவிலூர் சட்டப்பேரவை தொகுதி காலியானதாக கடந்த 5-ம் தேதி சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கை செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொன்முடி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிகமாக தண்டனையை நிறுத்தி வைத்ததோடு, அமைச்சராக பொன்முடி தொடரலாம் எனவும் தெரிவித்திருந்தது. அதையொட்டி, பொன்முடியை மீண்டும் அமைச்சராக பதவி பிரமாணம் செய்துவைக்க முதலமைச்சர் ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என். ரவிக்கு கடிதம் எழுதியிருந்தார். பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில் கடிதம் எழுதியுள்ளார். உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை என தெரிவித்துள்ளார். மேலும் திருக்கோவிலூர் தொகுதிக்கு உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக தீர்ப்பு தந்திருக்கலாம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார்.

இந்நிலையில், பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை உச்சநீதிமன்ற நீதிபதிகள் நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்கள். தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என எதன் அடிப்படையில் ஆளுநர் கூறுகிறார் என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.. தமிழ்நாட்டில் ஆளுநர் என்ன செய்து கொண்டுள்ளார் எனவும், நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது என கூற முடியும் எனவும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் கடுமையான கருத்துக்களை கூற வேண்டி இருக்கும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்தார்.

நாளைக்குள் ஆளுநர் ஆர்.என்.ரவி முடிவு எடுக்காவிட்டால், உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like