#BIG NEWS : மனித வெடிகுண்டு.. 20 பேர் உடல் சிதறி பலி..!

சிரியா தலைநகர் டமாஸ்கஸில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. இங்கு ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது தேவாலயத்தில் திடீரென குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஒருவன் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர். மேலும் 52 படுகாயம் அடைந்துள்ளனர் என சிரியா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.