#BIG NEWS : ஆபத்தான கட்டத்தில் இருக்கிறார்... போப் பிரான்சிஸ் பற்றி முதல் முறையாக அறிவித்த டாக்டர்கள்..!

88 வயதான போப் பிரான்சிஸ் மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா காய்ச்சல் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த பிப்.14ம் தேதி முதல் அவர் ரோமில் உள்ள ஜெமேலி மருத்துவமனையில் உள்ளார்.
போப் பிரான்சிஸ் உடல்நிலை எப்படி உள்ளது என்பது குறித்து பல்வேறு விதமான யூகமான தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. அவரின் உடல்நிலையின் தற்போதைய நிலை என்ன என்பது பற்றிய உண்மையான தகவல்கள் வெளியாகவில்லை.
இந்நிலையில் முதல்முறையாக போப் பிரான்சிஸ் எப்படி இருக்கிறார் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து டாக்டர்கள் ஜெர்ஜியோ அல்பியரி, லுகி கார்போன் ஆகியோர் கூறியதாவது;
அபாய கட்டத்தை போப் பிரான்சிஸ் தாண்டி விட்டாரா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உயிர்காக்கும் உபகரணங்கள் உதவியுடன் சிகிச்சையில் உள்ளாரா என்றால் அதற்கும் இல்லை என்று தான் சொல்வோம்.
இப்போது தான் அவரின் (போப் பிரான்சிஸ்) அறைக்குச் சென்று 20 நிமிடங்கள் பிரார்த்தனை செய்துவிட்டு வந்துள்ளோம். தற்போதைய நிலை என்பது இதுதான். அவரும் ஒரு சாதாரண மனிதர் தான்.
இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர்.