#BIG NEWS : அரசு பள்ளி ஆசிரியர்கள் திடீர் போராட்டம் அறிவிப்பு..!!

பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைபு சார்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளனர்/
இது குறித்து அவர்கள் கூறுகையில் இன்று ஆட்சி கட்டிலில் அமர்ந்திருப்பவர்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினர்.ஆனால் 27 மாதங்கள் உருண்டோடியும் வாக்குறுதி நிறைவேற்றப்படதது மிகுந்த வருத்தத்தையும் மன வேதனையும் அளிக்கிறது. தமிழக அரசு ஆசிரியர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், உயர் கல்விக்கு ஊக்க ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், தொகுப்பதி ஆசிரியர்களையும் முழு நேர ஆசிரியர்களாக மாற்றி கால முறை ஊதியம் வழங்கிட வேண்டும். அவர்களது பணி காலத்தை மட்டுமே தேவையான தகுதியாக கொள்ள வேண்டுமே தவிர ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை தமிழக அரசு முழுமையாக நிராகரித்து அதற்கு தேவையான சட்ட விதிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.
ஆசிரியர் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களையும் இதர படிகளையும் மாற்றி உயர்த்தி அமைக்க ஊதிய குழுவை மற்றும் மாநில அரசுகளை உடனடியாக அமைக்க வேண்டும். தமிழ்நாட்டில் மேல்நிலைக் கல்விக்கான தனியாக ஒரு இயக்குனராகத்தை உருவாக்க வேண்டும், மத்திய அரசுக்கு இணையான ஊதிய விகிதங்களை அமுல்படுத்தாத ஆசிரியர் பிரிவுக்கு விரைந்து அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.
பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைபு சார்பாக சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டமைப்பு சங்கம் அறிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது.இதனால், அன்று ஒருநாள் பள்ளிகள் இயங்காத நிலை உருவாகியுள்ளது. எனவே, ஆசிரியர்களுடன் அரசு உடனே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது