#BIG NEWS: தங்கம் விலை ஒரே நாளில் ரூ.1400 உயர்வு..!!
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று (அக்.06) காலை ஒரு சவரன் ரூ.88,480க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாலையில், சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, ரூ.89,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஒரு கிராம் தங்கம் காலையில் ரூ. 11,060க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், மாலை நிலவரப்படி கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,125க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ.1400 உயர்ந்துள்ளது.