1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS: தங்கம் விலை சவரனுக்கு 2080 குறைவு..!

Q

கடந்த வார தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.55,000-ஐ கடந்த நிலையில், வார இறுதியில் படிப்படியாக குறையத் தொடங்கியது.
நேற்று(திங்கள்கிழமை) தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.54,480-க்கும், ஒரு கிராமுக்கு ரூ. 15 குறைந்து ரூ. 6,810-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான சுங்க வரி குறைந்ததையடுத்து தங்கத்தின் விலை சவரனுக்கு ₹2,080 குறைக்கப்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை இன்று காலை ₹54,480க்கு விற்பனையான நிலையில் தற்போது ₹52,400க்கு விற்பனையாகிறது. இன்று காலை ₹6,810க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், தற்போது ₹260 குறைந்து ₹6,550க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று ₹6,825ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like