#BIG NEWS : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது..!
இலங்கையில் முன்னாள் அதிபர் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டது சர்வதேச அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது.
லண்டனில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் தனது மனைவிக்காக கலந்து கொண்டார். இந்த சம்பவம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்தது.
இந்நிலையில் தனிப்பட்ட பயணத்திற்காக அரசின் நிதியை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. லண்டன் பயணத்தின் போது ரணில் உடன் 10 பேர் சென்றதாக தெரிகிறது. இந்த பயணத்திற்கு மொத்தம் 17 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ஆனால் லண்டன் பயணத்திற்கான செலவை தனது மனைவி தான் முழுமையாக ஏற்றுக் கொண்டார் என்றும், தன் மீதான குற்றச்சாட்டுகள் அவதூறு பரப்பும் வகையில் அமைந்திருக்கின்றன என்றும் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்திருந்தார்.
இதுதொடர்பாக சிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் சிஐடி விசாரணைக்கான ரணில் விக்கிரமசிங்க நேரில் ஆஜராகுமாறு வழக்கறிஞர்கள் மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது. இதையடுத்து இன்று காலை நேரில் ஆஜரானார். விசாரணை நடந்து முடிந்த நிலையில் ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டிருக்கிறார்.
.png)