1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : முன்னாள் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என தீர்ப்பு..!

Q

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டம், ஹொளேநரசிபுராவில் தன் வீட்டில் பணியாற்றி வந்த, 47 வயது பெண்ணை பலாத்காரம் செய்த வழக்கில், ஹாசன் தொகுதி ம.ஜ.த., முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, கடந்தாண்டு கைது செய்யப்பட்டார்.விசாரணை முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு ஜூலை 30ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிபதி கஜானன் பட் அறிவித்திருந்தார்.

போதிய தொழில்நுட்ப தகவல் கிடைக்காத நிலையில், இன்றைய தினத்திற்கு (ஆக.,1) தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.

இந்த நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த பிரஜ்வல் ரேவண்ணா, நீதிபதி முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிபதி அறிவித்தார். அவருக்கான தண்டனை விபரங்களை நாளை வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like