#BIG NEWS:- திமுக முன்னாள் எம்எல்ஏ காலமானார்
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் 2016ல் போட்டியிட்டு வெற்றி பெற்ற திமுக முன்னாள் எம்எல்ஏ கு.க.செல்வம் இன்று காலமானார்.
திமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்தார். ஆனால், தலைமையுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக 2020இல் பாஜகவில் இணைந்தார். இருப்பினும், அவருக்கு அங்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. இதனால், பாஜகவில் இருந்து விலகி மீண்டும் திமுகவில் ஐக்கியமானார்.
போரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் 2016 முதல் 2021 வரை சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.